தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

உலக அளவில் முக்கியமான தியேட்டர்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 'லீ கிரான்ட் ரெக்ஸ்' தியேட்டரும் ஒன்றாகும். அங்குள்ள 2700 இருக்கைகள் கொண்ட தியேட்டரில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் பிப்ரவரி 25ம் தேதியன்று இரவு 8.15 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 57 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ளன. அங்குள்ள நகரப் பேருந்துகளில் கூட படத்தின் விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்நாட்டில் உள்ள அஜித் ரசிகர்கள் கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் படம் திரையிடப்படுவது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.
கடந்த சில வருடங்களில்தான் அத்திரையரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு விஜய், அஜித் நடித்து வெளியாகும் படங்களும் திரையிடப்பட ஆரம்பித்தன.
'வலிமை' பட திரையிடல் குறித்து கிரான்ட் ரெக்ஸ் தியேட்டர் நிர்வாகமும் வலைதளத்தில் 'தல அஜித்' என்று குறிப்பிட்டுள்ளது. அன்றைய காட்சிக்கு ஒரு டிக்கெட்டின் விலை 20 யூரோ, இந்திய ரூபாய் மதிப்பில் 1690 ரூபாய்.