சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன்.
படம் வெளியாகி சில வருடங்கள் ஆனா நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்.. இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்