சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பட்டையை கிளப்பும், டேனியல் கிரேக், பிரபல நடிகை ரேச்சல் வெய்சை திருமணம் செய்திருக்கிறார். இருவருமே, ஏற்கனவே ஒரு திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். முந்தைய திருமணங்களின் மூலம், ரேச்சலுக்கு ஒரு மகனும், கிரேக்கிற்கு, ஒரு மகளும் உண்டு. சமீபத்தில், நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த ரேச்சலிடம், "டேனியல் கிரேக்குடனான திருமண வாழ்க்கை எப்படி போகிறது என, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரேச்சல், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கிரேக்குடன், படம் பற்றிய விஷயங்களை பேசுவதே இல்லை. அதேபோல் அவரும், அவருடைய படங்களை பற்றியோ, நடிப்பை பற்றியோ பேசுவது இல்லை. வீட்டை பொறுத்தவரை, குடும்ப விஷயங்களை மட்டுமே பேசுவேன். அப்புறம்... கிரேக்கின் ஜேம்ஸ் பாண்ட் வேலைகளெல்லாம் என்னிடம் நடக்காது. வீட்டில் என் ராஜ்யம் தான் என, பெருமையடிக்கிறார்.