''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விமல், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பு உள்ளிட்ட வெகு சிலரே ஓட்டளித்தனர்.
தள்ளாத வயதிலும் கூட பொதுமக்கள் பலரும் காத்திருந்து ஓட்டளித்தனர். ஆனால் சினிமாவில் பிரபலமாக இருக்கும் திரைநட்சத்திரங்கள் அநேக பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் ரஜினிகாந்த், அஜித் குமார், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, ஆர்யா, வடிவேலு, ஷங்கர் உள்ளிட்ட பலரும் ஓட்டளிக்கவில்லை. பெரும்பாலும் இவர்கள் கூறும் கருத்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் வெளியூரில் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் ஓட்டளிக்கவில்லை என்கிறார்கள்.
வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் பலரும் ஓட்டு போடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று ஓட்டளித்துள்ளனர். சில பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து கூட ஓட்டு போட்டுள்ளனர். ஆனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஓட்டு போடவில்லை. திரைப்பிரபலங்கள் நினைத்தால் விமானத்தில் பறந்து வந்து ஓட்டு போட்டு செல்ல முடியும். ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
சமூகவலைதளங்களில் சினிமா நடிகைகள் தங்களது போட்டோக்களை தினம்தோறும் பதிவிட தவறுவதில்லை. குறிப்பாக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அதை பதிவிடுகிறார்கள். ஆனால் இன்று நடந்த தேர்தல் தொடர்பாக ஒரு சில நடிகைகள் தவிர மற்ற யாரும் தாங்கள் ஓட்டு போட்டோம் என தெரிவிக்கவில்லை.
சினிமாவில் மட்டும் தான் பக்கம் பக்கமாக ஓட்டு போடுங்க, ஜனநாயக கடமையை செய்ய தவற விடாதீங்க என ஏகத்திற்கும் வசனம் பேசுகிறார்கள் திரையுலகினர். ஆனால் நிஜத்தில் பலரும் அப்படி நடந்து கொள்வதில்லை என்பதே உண்மை.