மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
பிரசன்னா - கனிகா ஜோடி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் '5 ஸ்டார்'. இந்த படத்தில் தான் பிரசன்னா, கனிகா நடிகர்களாக அறிமுகமானார்கள். அதன்பின் இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவும் , கனிகாவும் இணைந்து அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்கிறார்கள். இயக்குனர் பாலாஜிமோகனின் உதவி இயக்குனர் விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இயக்குகிறார்.