சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பிப்ரவரி 14ம் தேதியன்று யு டியூபில் வெளியானது. வெளியான 24 மணி நேரங்களுக்குள் தென்னிந்திய அளவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற புதிய சாதனையைப் படைத்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை உடனடியாக முறியடித்தது 'அரபிக்குத்து'.
பாடலுக்கு சிலர் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்தாலும் இளம் ரசிகர்களின் மத்தியில் இப்பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 5 நாட்களுக்குள்ளாகவே 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது.
அஜித் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'வலிமை' படத்தின் முதல் சிங்கிளான 'நாங்க வேற மாறி' பாடல் யு டியூபில் கடந்த ஆறு மாதங்களில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த சாதனையை தற்போது 'அரபிக்குத்து' முறியடித்துள்ளது.
யு டியூபில் தென்னிந்திய அளவில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த 'ரவுடி பேபி' பாடல் 1300 மில்லியன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக அந்த சாதனையை எந்த ஒரு தென்னிந்தியப் படங்களின் பாடலாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.