உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கோப்ரா. கடந்த மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார்.
விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டு காலத்தில் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ள அஜய் ஞானமுத்து, கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.