மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் விஜய் எந்த அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கிறாரோ, அதே அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை வைத்திருப்பவர் மகேஷ்பாபு. இவரது சில படங்களை விஜய் ரீமேக் செய்து வெற்றி பெற்றதால் மகேஷ் பாபு, விஜய் இருவரது இடையிலான ஒப்பீடு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. விஜய், மகேஷ் பாபு ஆகியோரது ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. இருவரது சிங்கிள்களில் யாருடைய பாடல் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கப் போகிறது என்பது குறித்து இப்போதே இருவரது ரசிகர்களும் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் படங்களின் பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் ஆகியவைதான் எப்போதும் யு டியுபில் அதிக சாதனைகளைப் படைக்கும். அவற்றோடு ஒப்பிடும் போது மகேஷ் பாபு படங்கள் படைத்த சாதனைகள் குறைவுதான்.