பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில் தான். வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டுக்கென்றே படங்களும் தயாராகிறது. மலையாளிகள் உலகம் முழுக்க இருப்பதால் ஓடிடி வியாபாரம் கேரளாவில் அதிகமாக இருக்கிறது.
சிறிய படம் என்று இல்லாமல் பெரிய படங்களும் ஓடிடியில் வெளிவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான புரோ டாடி படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் வருமானத்தை இழந்தன. காரணம் மோகன்லால் படங்களுக்கு என்று ஒரு மினிமம் வசூல் இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் மோதிக் கொண்டிருந்தன. இறுதியில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படும்போது பெரிய படங்கள் முதலில் தியேட்டரிலும் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மோகன்லால் நடித்து முடித்துள்ள ஆராட்டு படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.