ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பூவே உனக்காக'. பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடரில் சமீபத்தில் நடிகை சாயா சிங்கும் இணைந்தார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடரிலிருந்து கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி திடீரென விலகிவிட்டார். இந்நிலையில் இந்த தொடரில் புதிய பூவரசியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
தற்போது ராதிகா ப்ரீத்திக்கு இணையாக வர்ஷினி அர்ஷா என்ற மற்றொரு அழகியை கண்டுபிடித்து பூவரசியாக நடிக்க வைக்கவுள்ளனர். இவர் புது நடிகை அல்ல. தெலுங்கு நடிகையான இவர் ஏற்கனவே 'அக்னி நட்சத்திரம்' தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் 'தாலி' என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் சிறப்பான பரத நாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.