ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
3 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த 100 என்கிற படம் தான் ஹன்சிகா கடைசியாக நடித்த தமிழ் படம். இதற்கு முன்பே நடித்து முடித்த மஹா படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்தி மற்றும் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. மஹா படத்தை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்பு நடித்த 'வாலு', விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார், இவர் தயாரிப்பாளராக மாறி தயாரிக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். விஜய்சந்தர் நடித்த வாலு படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் தயாரிக்கும் படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்கிறார் விஜய் சந்தர்.
இந்தப் படத்தை சபரி கிரீசன் மற்றும் குரு சரவணன் இயக்குகின்றனர். கதை, திரைக்கதை, வசனம் பணிகளை குரு சரவணன் கவனிக்கிறார். இது ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. படத்தை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.