காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ் சினிமவில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் நிறைய பேர். அவர்களில் தற்போது தனது வித்தியாசமான நடிப்பால் பரபரப்பாகப் பேசப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த 'மாநாடு' படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அவருடைய வசனங்கள் வீடியோ மீம்ஸ் செய்யும் அளவிற்கு பிரபலமானது.
'மாநாடு' வெற்றிக்குப் பிறகு அவரைத் தேடி பல புதிய படங்களின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சில படங்கள் இன்னும் வெளியாக வேண்டி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இப்படத்திற்காக அவருக்கு முன்பை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல். 'மாநாடு' வெற்றிக்குப் பிறகு எஸ்ஜே சூர்யாவும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
இதனிடையே, தெலுங்குத் தயாரிப்பாளர் ஒருவர் எஸ்ஜே சூர்யாவை அவரது படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அணுகியதாகவும் ஏழு கோடி ரூபாயை எஸ்ஜே சூர்யா சம்பளமாகக் கேட்க அதிர்ச்சியுள்ள தயாரிப்பாளர் அமைதியாகச் சென்றதாகவும் தகவல் பரவி வருகிறது.




