'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நடிகை கீர்த்தி சுரேஷும் சமந்தாவும் மகாநடி என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிவிட்டனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து சமந்தாவுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு அழகிய குட்டி பெண்ணை சந்தித்து, அவரிடம் உனக்கு வருங்காலத்தில் யார் போல ஆவதற்கு விருப்பம் என கேட்கிறார்.
அதற்கு அந்த குழந்தை சமந்தாவை போல வரவேண்டும் என தன் விருப்பத்தை சொல்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டு, சமந்தா உன்னுடைய மிகப்பெரிய தீவிரமான ரசிகை இங்கே இருக்கிறார். அவரை நீ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு பதிலளித்துள்ள சமந்தா யார் இந்த அழகு குட்டி என்று கேள்வி கேட்டுள்ளார்.