இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
எம்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் கூர்மன். பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி உள்ளார். ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார், சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை ஜனனி, இயக்குனரிடம் சண்டைபோட்டு இந்த படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் இயக்குனராகி படம் எடுக்கும்போது நான் தான் அதில் நடிப்பேன். வேறு யாரையாவது நாயகியாக போட்டால் உங்களிடம் வந்து சண்டை போடுவேன் என்றேன். நான் இதனை ஜாலியாகத் தான் அவரிடம் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார்.
இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்தது எல்லாமே மேஜிக்தான். ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும், ஆனால் அன்று நல்ல மழை, அதனால் அந்த காட்சிகள் மழையில் நடப்பதாக காட்சியை மாற்றி எடுத்தோம்.
ஒரு காட்சியை மழையில் எடுத்தால் எல்லா காட்சியையும் மழையில் எடுக்க வேண்டுமே. அதனால் மழை நின்று விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே காட்சிகளை எடுத்தோம். மேஜிக் மாதிரி கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றார்.