பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா டான்டன், பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோலார் தங்க வயலின் பழங்கால பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாக பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளி போடப்பட்டது. தற்போது வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். படத்தின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு அனிகுடே ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.