வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். சிலர் தொடர்ந்து தங்களைப் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்வார்கள். அப்படி சமூக வலைத்தளங்களில் பிஸியாக இயங்கி வரும் ஒரு நடிகை ராஷி கண்ணா.
டுவிட்டர், இன்ஸ்டாகிராம் தளங்களிலும் சேர்த்து 10 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார். இப்போது தனக்கான யு டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். நேற்று இது பற்றிய அறிவிப்பை, “என்னுடைய நிஜ வாக்கையைப் பற்றிய எல்லாம் உள்ளே குதிக்கிறேன்,” எனச் சொல்லி 3 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
எனது நிஜ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஸ்னீக் பீக். எல்லா யு டியுப் சேனல்காரர்களும் குறிப்பிடுவது போல, லைக், ஷேர், சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று கேட்டுக் கொண்டுள்ளார் ராஷி. 14 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்களை அதற்குள் சேர்த்திருக்கிறார்.
யு டியுப் சேனல் ஆரம்பிக்கும் சில முன்னணி நடிகைகள், சில காலம் கழித்து அவற்றைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ராஷி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.