'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை எல்வின் சர்மா. இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுகுறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் எல்வின் சர்மா கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எனக்கு வலிமை கிடைக்கிறது. நான் அதை அழகாக பார்க்கிறேன். அதோடு தாய்ப்பால் என்பது ஆரோக்கியமான விசயங்களில் ஒன்று. முக்கியமாக பெண்களுக்கு மார்பகம் இருப்பது தாய்பால் கொடுப்பதற்காகத்தான். அதைக் சொல்வதற்கும், அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்வதற்கும் எதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது,