ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் மறைந்த என்டிஆர் என்கிற என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த போதும் அவரது மாமனார் என்டிஆர் பெயரில் எந்த மாவட்டத்திற்கும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 13 புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக சேர உள்ள 13 மாவட்டங்களால் மொத்தம் 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வர உள்ளன.
அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க உள்ளனர். அதன் தலைநகராக விஜயவாடா நகரம் இருக்கும். கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார். அதனடிப்படையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டம் அமைய உள்ளது தெலுங்குத் திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




