சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பாகுபலி மற்றும் சாஹோ படங்களின் உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு பிரபாஸின் கேரியர் கிராப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உயர்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி பிரபாஸ் ஒரு மாருதியுடன் ஹாரர் காமெடி படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் தற்போது கைவசம் 8 படங்கள் உள்ளன. அவரது சமீபத்திய படமான ராதேஷ்யாம் காதல் கதையிலும், ஆதி புருஷ் புராண கதையிலும், சலார் ஆக்சன் கதையிலும் உருவாகியுள்ள இப்படங்கள் 2022ல் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
மேலும் நான் அஷ்வினுடன் பிராஜெக்ட் கே. இந்தப்படத்தில் அறிவியல் புனைகதை மற்றும் எதிர்காலம் குறித்த கதையில் நடிக்கிறார். அதையடுத்து சந்தீப் ரெட்டி வங்காவுடன் ஸ்பிரிட் என்ற ஆக்சன் படத்திலும், இயக்குனர் சித்தார்த் ஆனந்துடன் ஒரு படத்திலும், தில் ராஜூ தயாரிப்பில் மற்றொரு படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்போது பிரபாஸ் புக் ஆகி விட்டார்.