'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'மைனா' படத்தின் மூலம் பிரபலமடைந்த அமலா பால், அதன்பின் சில வெற்றிப் படங்களில் நடித்தார். திருமணம், விவாகரத்து என அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அவருக்கு படங்கள் குறைந்தது. கடைசியாக 2019ல் வெளிவந்த 'ஆடை' படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளிவந்த 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். தற்போது “அதோ அந்த பறவை போல, கடவர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பவர் அமலா பால். நேற்று திடீரென அடுத்தடுத்து சில புகைப்படங்களை அள்ளித் தெளித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
அமலா பால் ஹிந்தியில் நடித்துள்ள 'ரஞ்சிஷ் ஹை சாஹி' வெப் தொடருக்கான பிரமோஷன் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அவை. “நாம் வேடிக்கையாக இருக்கும் போது நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள். அம்னா பர்வேஸுக்கு உயிர் கொடுக்க நான் அவ்வளவு கடினமாக உழைத்தேன். எனக்கும் சரியான நேரம் கிடைத்தது. நான் செய்வதை விரும்புவதற்கும், நான் விரும்புவதை செய்வதற்கும் சிறப்பாக இருக்கிறது,” என அப் புகைப்படங்களில் பதிவிட்டுள்ளார்.
'ரஞ்சிஷ் ஹை சாஹி' வெப் தொடர் பிரபல ஹிந்தி இயக்குனர் மகேஷ் பட், 70களின் கனவுக்கன்னி பர்வீன் பாபி ஆகியோருக்கு இடையிலான காதலைப் பற்றிய தொடர் என்கிறது பாலிவுட் வட்டாரம். பர்வீன் பாபி கதாபாத்திரத்தை இத் தொடரில் அம்னா பர்வேஸ் எனப் பெயர் வைத்து எடுத்துள்ளார்களாம். அக்கதாபாத்திரத்தில்தான் அமலா பால் நடித்துள்ளார்.