மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் எதற்கும் துணிந்தவன்.. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவடைந்து விட்டது. வரும் பிப்-4ஆம் தேதி ரிலீசாகும் என கடந்த டிசம்பர் மாதமே தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போக வாய்ப்பிருக்கும் என தெரிகிறது. தயாரிப்பு நிறுவனமும் இதை சூசகமாக உணர்த்தியுள்ளது. அதாவது இதற்கு முன்னால் வைத்திருந்த ரிலீஸ் தேதியுடன் கூடிய கவர் போட்டோவை மாற்றிவிட்டு ரிலீஸ் தேதி குறிப்பிடாத அதே டிசைனில் உருவாக்கப்பட்ட மற்றொரு கவர் போட்டோவை தற்போது மாற்றி வைத்துள்ளனர்.