'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான பாவனி ரெட்டி, அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். போட்டியின் இறுதிவரை சிறப்பாக விளையாடிய பாவனி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்தவாரம் முடிவடைந்த நிலையில், தற்போது குடும்பத்துடன் இணைந்துள்ள பாவனி ரெட்டிக்கு லேசான உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளார். பாவனி தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பாவனியின் ரசிகர்கள் அவருக்கு சீக்கிரம் உடல் நலமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.