'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கும், பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்தவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் டாப்பில் இருந்தாலும் இன்னும் சென்னையில் வசித்து வரும் தேவி, தமிழிலும் சில பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கில் தயாராகி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளிவந்த 'புஷ்பா' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஹிந்தி ரசிகர்களுக்கும் படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது.
இந்நிலையில் பிரபல இசை கம்பெனியான டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமாரை சந்தித்துப் பேசியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். 'புஷ்பா' பாடலுக்கு ஹிந்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தேவியை ஹிந்தியிலும் அறிமுகப்படுத்த பூஷன் நினைப்பதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த சில தெலுங்குப் பாடல்களை ஹிந்தியில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவியின் இசையில் வெளிவந்த 'துவ்வட ஜகன்னாதம்' என்ற படத்தில் இடம் பெற்ற 'சீட்டிமார்' பாடலை பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த 'ராதே' படத்தில் பயன்படுத்தியிருந்தனர். அப்பாடலும் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.