சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு கதிர்வேலின் காதலி என்று பெயர் வைத்துள்ளனர். தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகி, முதல்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வெற்றி நாயகனாக ஜொலித்த உதயநிதி ஸ்டாலின், அடுத்து "சுந்தரபாண்டியன்" டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. இவர்களுடன் சந்தானம், பரோட்டா சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெயர் எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்துக்கு தலைப்பாக "கதிர்வேலின் காதலி" என்று பெயர் வைத்துள்ளனர். காதல், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினே இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.