Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிரபல சேனலின் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோ மீது புகார்!

17 ஜன, 2022 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-TV-channel-regards-children-reality-show

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சேனலில், குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4' நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் எபிசோடில் இரு சிறுவர்கள் இணைந்து, வடிவேலுவின் இம்சை அரசன் பாணியில் நாட்டு நடப்பை கிண்டல் செய்து நடித்திருந்தார்கள். அது தற்கால அரசியல் சூழலோடு ஒத்துப்போகும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர், அந்நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சி சார்பில், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதத்தில், 'நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த பகுதியில் நடித்திருந்த சிறுவர்களுக்கு அந்த காட்சியின் தன்மையையோ அல்லது உண்மை நிலையையோ அறிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்கள் குழந்தைகள். ஆனால், காமெடி என்ற பெயரில் குழந்தைகள் மீது அந்த கான்செப்ட் திணிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி முழுவதிலுமே நடுவர்களும், தொகுப்பாளர்களும் சிறுவர்களின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இது, அந்த சேனலை பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தவறான கண்ணோட்டத்தை தேசிய அளவில் உருவாக்குகிறது.

எனவே, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடுவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
புடவையில் 'நச்'சென கம்பேக் கொடுத்த ரம்யா பாண்டியன்புடவையில் 'நச்'சென கம்பேக் ... கேப்ஷனில் கெத்து! சொல்லி அடித்த தர்ஷா குப்தா! கேப்ஷனில் கெத்து! சொல்லி அடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18 ஜன, 2022 - 13:55 Report Abuse
pradeesh parthasarathy சின்ன பசங்களை பார்த்தும் பயப்படும் சூழ்நிலை....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18 ஜன, 2022 - 06:11 Report Abuse
NicoleThomson எதற்காக பாஜகவினர் பொங்குறாங்க, உண்மையில் புலிகேசி என்பவர் கேரக்டர் கரெக்ட்டா துண்டுசீட்டு நடிகர் பார்ட்டிக்குத்தான் பொருந்தும் இந்த சிறுவர்கள் சொல்லுவது அவரைத்தான் குறிக்கும் என்று கூடவா முன்களப்பணியாளர்களுக்கு புரியாது?
Rate this:
17 ஜன, 2022 - 17:12 Report Abuse
கோவிந்தா ..
Rate this:
17 ஜன, 2022 - 17:13 Report Abuse
கோவிந்தா ZEE TV பங்குகள் 51 சதவீதம் சோனி டிவி வசம் சென்று விட்டது.....10 முதல் 15 சதவீதம் ALT BALAJI நிறுவனம் வசம் உள்ளது.... சோனி டிவியானது சன் டிவி இந்தியில் வைத்திருக்கும் சேனல்........மோடிக்கு எதிரான கோஷம் இனி ஜீ டிவியில் அடிக்கடி எதிர்பார்க்கலாம்.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in