இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

ஆனந்தி கடந்த ஆண்டு கமலி பிரம் நடுக்காவிரி என்ற ஒரே படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்து முடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படங்கள் வெளிவர வேண்டியது உள்ளது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோ வின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சுசி கணேசனின் உதவியாளர் ராஜசேகரன் இயக்குகிறார். தயாரிப்பளர் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. என்றார்.