மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு |

கன்னட நடிகை ராகினி திவேதி. ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியா நடித்தார். அதற்கு முன் அறியான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகினி சுமார் 4 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். கன்னட படம் ஒன்றில் நடித்து வரும் அவர் தற்போது மீண்டும் தமிழிலும் நடிக்கிறார்.
த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய கே.திருஞானம் இயக்கும் ‛ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.




