பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ் சின்னத்திரையில் அழுத்தமான கதாபாத்திரம் மூலம் தனக்கென ரசிகர்களை கொண்டவர் நடிகை பிரேமி வெங்கட். செய்தி வாசிப்பாளராக பயணத்தை துவக்கிய இவர், சீரியல், வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சி ன்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்று செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...
சின்னத்திரையில் உங்கள் பயணம் எப்படி துவங்கியது செய்தி வாசிப்பாளராக இருந்த போது வாணி ராணி சீரியலில் நடிகை ராதிகாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சந்திரலேகா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தேன். கண்மணி, சுந்தரி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட 15 சீரியல்களில் நடித்துள்ளேன். சின்னத்திரையில் சிறந்த வில்லி, சிறந்த அம்மா கதாபாத்திரத்திற்கு விருதுகளை பெற்றேன்.
பொங்கல் பண்டிகை என்றால் உங்கள் நினைவில் வருவது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீட்டின் மாடியில் பொங்கல் கொண்டாடுவோம். எனது மாமியார் வீட்டுக்கு சென்று கிராமத்தில் கொண்டாடும் போது பொங்கல் பண்டிகை உற்சாகமாக இருக்கும். மாட்டின் கொம்பில் வண்ணம் தீட்டுவது, பெண்கள் இணைந்து கோலமிடுவது என கோலாகலமாக இருக்கும். சமீப காலமாக வேலைப்பளு காரணமாக பண்டிகையின் போதும் குடும்பத்துடன் இருக்க முடியாத சூழல் உள்ளது.
தமிழ் சீரியல் நடிகர்கள் முன் உள்ள சவால்கள் தமிழ் சீரியலை பார்ப்பது பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் தமிழக கலைஞர்களுக்கு சவாலாக உள்ளது.
கன்னட சீரியல்களில் நடிப்பின் போதே குரல் பதிவு செய்வதால் கன்னட மொழி தெரிந்தவர்கள் தான் அதில் நடிக்க முடியும். ஆனால் தமிழில் குரலை தனியாக பதிவு செய்வதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிறிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் கூட தமிழக நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தனது குழந்தையையும் வாழவைக்க வேண்டும்.
சமூக ஊடகம் நடிகர்களுக்கு சாதகமா? பாதகமா? சமூக ஊடகம் மூலம் பலர் அடையாளம் காணப்படுகின்றனர். சமூக ஊடகத்தில் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. தனிப்பட்ட நபர் குறித்து அவதுாறு பரப்புவது அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரசிகர்களிடம் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு பெண்கள், இளைஞர்கள் என்னை பாராட்டுவது மேலும் முன்னோக்கி செல்ல துாண்டுகிறது. குறிப்பாக எனது கண்கள் ரொம்ப பிடிக்கும் என பலர் தெரிவித்தனர். நடிப்பின் போது எனது கண் செய்கை கதாபாத்திரத்துடன் ஒன்றிணைவதாக பலர் கூறியுள்ளனர். இதை எனது அம்மா கேட்கும் போது மகிழ்ச்சி அடைவார்.
உங்கள் அடுத்தகட்ட பயணம் புதிதாக நடிக்க வருபவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகிறேன். எதிர்காலத்தில் நடிப்பு பயிற்சி பள்ளி துவங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.