'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் படம் வாத்தி. தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் பூஜையில் தனுஷ் - சம்யுக்தா மேனன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் அதையடுத்து வாத்தி படத்திலிருந்து சம்யுக்தா மேனன் விலகி விட்டதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. அதோடு அவருக்கு பதிலாக வேறு நடிகையை படக்குழு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில் ‛வாத்தி / சார் என்னுடைய முதல் நாள்' என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாத்தி படப்பிடிப்பில் தற்போது சம்யுக்தா மேனன் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த மாதம் இறுதிக்குள் வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதால் தற்போது தனுஷ் - சம்யுக்தா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.