மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். 84 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளியில் வந்தார் திலீப்.
தற்போது கடத்தல் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக திலீப் மற்றும் அவரது உறவினர்கள் மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலிப் தற்போதைக்கு முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் "இது எளிதான பயணம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத் தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளது.
இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தை உறுதியுடனும் உயிர்ப்புடனும் தொடர்வேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும், உங்கள் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை அனைவரையும் நெகிழச் செய்தது. திலீப் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் மறைமுகமாக திலீபின் பக்கமே நின்றது. மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுகுறித்து மவுனம் காத்து வந்தனர். நடிகைகள் பார்வதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட சிலரே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்றனர்.
திலீபின் மீது புதிய வழக்கு, பாதிக்கப்பட்ட நடிகையின் கண்ணீர் அறிக்கை இதற்க பிறகு எல்லோருமே பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கம் நிற்கிறார்கள். குறிப்பாக மம்முட்டி, அந்த நடிகையின் அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு "நான் உங்களுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று மோகன்லாலும் அறிக்கையை பகிர்ந்து "மரியாதை" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பிருத்விராஜ் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் தங்கள் ஆதரவை கடத்தப்பட்ட நடிகைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.