மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

2022ம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டமாக அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் இருக்கப் போவதை எண்ணி அவரது ரசிகர்கள் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே உற்சாகமாகக் காத்திருந்தார்கள். ஆனால், கொரானோ அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
நாளை ஜனவரி 13ம் தேதிதான் 'வலிமை' படம் வந்திருக்க வேண்டும். வேறு எந்த பெரிய படங்களும், முன்னணி நடிகர்களின் படங்களும் இல்லாத காரணத்தால் 'வலிமை' வெளியீட்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாட இருந்த ரசிகர்கள் இப்போது கடும் வருத்தத்தில் உள்ளனர். பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொரானோவைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் நடித்து கடைசியாக 2019ம் ஆண்டு தீபாவளிக்கு 'நேர் கொண்ட பார்வை' படம் வெளிவந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்னும் சில மாதம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவிப்புகள் கொரானோ அலையின் தீவிரம் குறைந்த பிறகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது வந்திருந்தால் 'சோலோ'வாக வந்திருக்கலாம். அடுத்து வரும் போது இப்படி சோலோவாக வர வாய்ப்பில்லை. கூடவே, போட்டிக்கு வேறு படங்களும் வரலாம். விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' உடன் வந்தால் பரவாயில்லை, 'ஆர்ஆர்ஆர்' உடன் வந்தால்……பொறுத்திருந்து பார்ப்போம்.




