சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மாடல் அழகியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்தவர் ரைசா வில்சன். பியார் பிரேம காதல், வர்மா, தனுஷ் ராசி நேயர்களே படங்களில் நடித்தார். தற்போது எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை, பொய்கால் குதிரை படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே கொரோனா தாக்கி அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் ரைசா வில்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ரைசா எழுதியிருப்பதாவது: எனக்கு 2வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன. நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இருக்குமோ, பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள். என்று எழுதியுள்ளார்.