ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மலையாள திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக விதவிதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் குணச்சித்திர நடிகை லேனா. தமிழில் அனேகன், திரவுபதி ஆகிய படங்களில் டாக்டராக நடித்திருந்தார். மலையாளத்தில் தற்போதும் பிசியான குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் லேனா.
கடந்த 2004-ம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவகாரத்து உத்தரவு வந்தபோது நீதிமன்ற கேன்டீனில் தாங்கள் இருவரும் ஒரே கிண்ணத்தில் குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாக கூறும் அளவுக்கு முதல் கணவரிடம் இருந்து நட்பாகவே பிரிந்தார்.
இந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து தற்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் லேனா. இவர் இந்திய விமான படையில் பைலட்டாக பணிபுரிகிறார். ககன்யான் என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரசாந்த் இருந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதமே தாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ள லேனா, இது பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட திருமணம் தான். நேற்று(பிப்-27) கேரளா வந்த பிரதமர் மோடியின் கையால் சிறந்த விமானப்படை வீரருக்கான விருதை பிரசாந்த் பாலகிருஷ்ணன் பெற்ற பின்னர் தான் தங்களது திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.