இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
2024ம் ஆண்டு ஆரம்பமாகி இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிவடைய உள்ளது. இந்த இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவில் அதிக பாராட்டைப் பெற்ற படங்கள் என ஒரு படம் கூட இதுவரையில் வரவில்லை. வசூல் ரீதியாகவும் லாபத்தைத் தந்தது என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் அமையவில்லை.
ஆனால், மலையாள சினிமாவில் இந்த இரண்டு மாதங்களில் சில படங்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற மொழிகளில் உள்ள ரசிகர்கள் கூட அந்தப் படங்களை தியேட்டருக்குச் சென்று பார்த்து பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள். அதுவும் ஒரே மாதத்தில் வெளிவந்த மூன்று படங்கள் அப்படி ஒரு வரவேற்பை தமிழகத்திலும் பெற்று வசூலிலும் சாதனை புரிந்து வருகின்றன.
பொதுவாக விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த தமிழ்ப் படங்கள்தான் கேரளாவில் வெளியாகி அங்குள்ள ரசிகர்களைக் கவர்வது வழக்கம். மலையாளப் படங்களுக்கு ஈடாக அவர்களது படங்களும் வசூலைக் குவிக்கும்.
ஆனால், தற்போது சில மலையாளப் படங்கள் தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இங்கு வெளியான நேரடிப் படங்களை விடவும் அதிக வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகின்றன. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அந்த மலையாளப் படங்களைப் பாருங்கள் என மற்றவர்களுக்கு 'ரெகமெண்ட்' செய்கிறார்கள்.
பிப்ரவரி 9ம் தேதி வெளிவந்த 'பிரேமலு','அன்வேசிப்பின் கண்டெத்தும்' பிப்ரவரி 15ம் தேதி மம்முட்டி நடித்து வெளிவந்த 'பிரம்மயுகம்', பிப்ரவரி 22ம் தேதி வெளிவந்த 'மஞ்சுமேல் பாய்ஸ்' ஆகிய படங்கள்தான் அந்தப் படங்கள்.
நஸ்லென் கே கபூர், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் கிரிஷ் எ.டி இயக்கத்தில் வந்த படம் 'பிரேமலு'. இளம் காதலர்களைப் பற்றிய கதைதான். ஆனாலும், சுவாரசியமாகச் சொல்லி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்கள்.
டொவினோ தாமஸ் நடிப்பில் 'அன்வேசிப்பின் கண்டெத்தும்' என்கிற துப்பறியும் கதை பின்னணியில் இந்த படம் வெளியானது.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'பிரம்மயுகம்'. 17ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. ஒரு தனிமையான வீட்டில் நடக்கும் மர்மங்கள்தான் படத்தின் கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில் கருப்பு வெள்ளையில் வந்துள்ள படம். மம்முட்டியின் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று சொல்லாம்.
சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்து வந்துள்ள படம். மஞ்சுமேல் என்ற ஊரிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கூட நேரடி தமிழ்ப் படங்களை விடவும், இந்த மூன்று மலையாளப் படங்களுக்கு இளம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது தியேட்டர்காரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் பக்கம் சென்றாலே இந்த மூன்று படங்களைப் பற்றிய பதிவுகளை டைம்லைனில் காணாமல் இருக்க முடியவில்லை.
அட, இப்படியெல்லாம் கூட ஒரு கதையை எழுத முடியுமா என மலையாள இயக்குனர்களைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் யோசிக்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் இப்படியான படங்கள் இந்த ஆண்டில் வருமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.