பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‛சினம் கொள்'. ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நர்வினி டெய்ரி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது: 2009ல் இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பிறகு அங்கு எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது. யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம். போரின் வடுக்களோடு வாழும் மக்களின் அவலத்தை மட்டுமல்லாது, போருக்கு பிறகு அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அங்கே படப்பிடிப்பை நடத்த மிகவும் சிரமப்பட்டோம் சிங்களர்களுக்கு எதிரான படம் என்று படப்பிடிப்பை நடத்த விடாமல் செய்துவிட்டார்கள். அதனால் சுமார் 10 நாட்களுக்கும் மேல் 75 பேருடன் யாழ்ப்பாணத்தில் சும்மா இருந்தோம். அதனால் எங்களுக்கு பண இழப்பும் ஏற்பட்டது. எப்படியோ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் வருகின்ற 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்றார்.