டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் | பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம் | ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்! | ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம் | மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள் | தொடர் தோல்விகளால் தடுமாறும் நயன்தாரா |
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் தேள். பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஹரிகுமார் கூறியதாவது:
இது குடும்ப பாசத்தை சொல்லும் படம். அதனால் பொங்கல் பண்டிகை அன்று வெளியாவது பொருத்தமானது. ஒரு விழாக்கால கொண்டாட்டமாக, குடும்ப உறவுகள், , நகைச்சுவை, ஆக்ஷன் நல்ல இசை மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படமாக உருவாகி உள்ளது. குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விருந்தாக இருக்கும். இவ்வாறு கூறினார்.