ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

சினிமா வாய்ப்புள் இல்லாவிட்டாலும் இணையதளம் மூலம் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இதனாலேயே இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் ‛தில்லு இருந்தா போராடு' என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
வனிதாவுடன் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர், சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும் கவனிக்கிறார்கள். கே.முரளிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது.
பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவின் உதவி கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் தில்லு இருந்தா போராடு. இதில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா நடிக்கிறார். இவ்வாறு கூறினார்.




