நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள நடிகையான அஞ்சு குரியன். சென்னை டூ சிங்கப்பூர் படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இக்ளு என்ற படத்தில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாள படங்களுக்கு சென்று விட்டார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
எஸ்.ஏ.எஸ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. புதுமுகம் மணிவர்மன் இயக்குகிறார். இதில் அஞ்சு குரியன் ஆரி அர்ஜுனா ஜோடியாக நடிக்கிறார். தமன் குமார் இசை அமைக்கிறார். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஈரோடு மகேஷ், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.