பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி. போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் 3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அஜீஸ் பாஷா என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டதாகவும், முஸ்லிமாக மதம் மாறிவிட்டதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி அம்மா ஆகிறார். மே மாதம் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கர்ப்பமாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன, அது ஒரு பையனாக இருக்கப் போகிறது என்ற உணர்வு எனக்கு வருகிறது, குழந்தை பிறக்கும் தேதி வரை கடுமையாக உழைக்க முடிவு செய்திருக்கிறேன். பல பெண்கள் தங்களின் தவணை தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை வேலை செய்வதைப் பார்க்கிறேன், அவர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் பிசியாக இருக்கிறேன்.
குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன் ஏனென்றால் இதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான் தயாராக இல்லை. இதற்கிடையில், வீட்டில், எனது பெற்றோர், வழக்கமான இந்தியப் பெற்றோர்களைப் போலவே, எனக்கு எப்போது குழந்தைகள் பிறக்கும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இப்போது எனக்கு 34 வயதாகிறது, அதனால் நான் தாய்மையை தழுவிய நேரம் இது என்று நானும் உணர்ந்தேன். என்கிறார்.