ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

சொல்லாமலே, சுந்தரபுருஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் லிவிங்ஸ்டன். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர் அடுத்து சுந்தர புருஷன் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதை எழுதி இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் ஹீரோ ஆன அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்துல நடந்தது. நல்லா நினைவுல இருக்கு. ஒரு ரயில் பயணம். விஜயகாந்த் சார் நான் இன்னும் மூணு பேர் போயிட்டிருக்கோம். அந்த இடத்துலதான் முதன் முதலா நான் ஹீரோவா பண்ணனும்னு நினைக்கிற விருப்பம் பத்தி வாய் திறக்கேன். நான் சொன்னதும் பக்கத்துல இருந்த அந்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு அவமானமாப் போச்சு. நான் கூனிக் குறுகுறதைப் பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்திடுச்சு. அவங்களைப் பார்வையாலேயே முறைச்சவர. இந்த மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள் வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்துலயாச்சும் நடிச்சிடணும்னு முடிவு செய்தேன். கடவுள் அருளால் அது நடக்கவும் செய்தது. என்றார்.