'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய். ஓரிரு படங்களில் நடித்தவருக்கு அதன்பிறகு வெள்ளித்திரையில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் அபிநய் - பாவனி விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அப்போது கூட அபிநய் பற்றி நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என, அபிநய்க்கு சப்போர்ட்டாக தான் அபர்ணா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அபர்ணா இன்ஸ்டாவில் தனது பெயரை அபர்ணா அபிநய் என்பதை மாற்றி அபர்ணா வரதராஜன் என மாறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிய போவது மாதிரியான தகவல்கள் சமூகவலைதளங்களில் உலா வர தொடங்கி உள்ளன.
ஏற்கனவே நடிகை சமந்தா ஆரம்பத்தில் இப்படி தனது கணவரின் குடும்ப பெயரை தனது பெயருக்கு பின்னால் இருந்ததை நீக்கினார். பின்னர் அவர்கள் பிரிவதாக அறிவிப்பு வந்தது. இதனால் அபிநய் - அபர்ணா இடையேயும் அது மாதிரி இருக்குமோ என செய்திகள் பரவ தொடங்கி உள்ளன.
இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வட்டாரங்களில் விவாகரத்து வதந்தியாக பரவி வருகிறது. எனினும், அபர்ணாவோ, அபிநய்யோ இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கவில்லை. சமூகவலைதளத்தில் எதற்காக அபிநய் பெயரை நீக்கினர்கள் என கேள்வி எழுப்பி வருவதோடு, அபிநய் நல்லவர் தவறான முடிவை எடுக்க வேண்டாம் அபர்ணா என அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வாழ்வில் புதிய வாய்ப்புகளை, அடையாளங்களை ஏற்படுத்தி தரும் என்பார்கள். ஆனால் அபிநய்க்கோ இப்படி ஒரு அதிர்ச்சி விஷயம் நடக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருப்பினும் இது உண்மையாக இருக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.