210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
அவரது திருமண வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லவில்லை. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி விரைவிலேயே விவகாரத்து பெற்றார். மகேஸ்வரிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்து மிகவும் வருந்தி பேசியுள்ளார். அதில், 'ரெண்டாவது கல்யாணத்த பத்தி யோசிக்கவே முடியல. யார் மேலயும் நம்பிக்கை வரவே மாட்டங்குது. என்னோட பையன், என்னோட அம்மா, என்னோட கேரியர் மூன்றையும் பேலன்ஸ் பண்ணி ஆகனும். இத புரிந்து கொள்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்வு பண்ண முடியல. வரபோறவர் என்னுடைய பையனையும் ஏற்றுக் கொள்ளணும். அதனால இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்கிற பயம் இருக்கு. நானும் என் அம்மாவும் சிங்கிள் மதர் தான்' என்று பேசும் போது வீஜே மகஸ்வரி, அழுது கொண்டே பேசினார்.