'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2021ம் ஆண்டு நடிகர் சிம்புவிற்கு திருப்புமுனை தந்த ஆண்டாக அமைந்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புத்தாண்டை முன்னிட்டு சிம்பு வெளியிட்ட அறிக்கை : நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.
இறைவனின் கருணையால் இந்த புதிய வருடத்தை காண உள்ளோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை பெரிய வெற்றி படமாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும், உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக மக்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல
இவ்வாறு தெரிவித்துள்ளார்.