நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்ட படம் ‛ஆர்ஆர்ஆர்'. பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்த படம் ஜன.7ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட படக்குழுவினர் ஐந்து மொழிகளில் புரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டார்கள். அதனால், படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகிறார்கள். அதன் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். எனவே இந்த படம் தள்ளிப்போவதாக காலை முதலே தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‛‛கொரோனா அச்சத்தால் விநியோகஸ்தர்கள் பலரும் வெளியீட்டை தள்ளி வைக்க கோரி வருகின்றனர். அனைத்து தரப்பினரின் நலன்களையும் மனதில் வைத்து, எங்கள் படத்தை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவோம். நிபந்தனையற்ற அன்பிற்காக அனைத்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி'' என தெரிவித்துள்ளனர்.




