மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து செய்தி பரவிய நிலையில் பின்னர் அதை உறுதி செய்தனர்.
சமந்தா விவாகரத்துக்கு பின் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கியுள்ளார். அவர் அடுத்து நடித்துவரும் படம் யசோதா. யசோதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹரி மற்றும் ஹரீஷ் படத்தை இயக்குகின்றனர். இந்தப் படத்தில் சமந்தா நர்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் நர்சாக நடித்ததில்லை. மிகவும் வலிமையான வேடம் என இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் முடிந்துள்ளது. யசோதா, நாயகி மையத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.