விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'விக்ரம் வேதா' படம் 2017ல் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர்.
ஹிரித்திக் ரோஷன், சைப் அலிகான், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்குகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு லக்னோவில் 19 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
முதல் கட்டப் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்றது. அடுத்து மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 2022ல் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தை 2022 செப்டம்பர் 30ம் தேதி வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும் நடிக்கின்றனர்.