ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இயக்குனர் ராஜமவுலி படங்களின் கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். ராஜமவுலி படங்கள் தவிர இந்தியிலும் பஜ்ரங்கி பைஜான், மணிகர்ணிகா ஆகிய படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். தற்போது அவரது கதை உருவாக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வரும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை குறித்த ரகசியம் ஒன்றையும் அந்தப்படத்தின் ஹீரோவாக நடித்த சல்மான்கானின் தந்தை தனக்கு கொடுத்த அறிவுரை பற்றியும் கூறியுள்ளார்.
பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை உருவாக்க தூண்டுதலாக அமைந்தது இரண்டு விஷயங்கள் தான்.. ஒன்று மம்முட்டி நடித்து பாசில் இயக்கி மலையாளத்தில் வெளியான பூவின் புதிய பூந்தென்னல் (தமிழில் பூவிழி வாசலிலே) படத்தில் ஆதரவற்ற சிறுமியை காப்பாற்ற போராடும் ஹீரோ என்கிற கான்செப்ட்.. இன்னொன்று பாகிஸ்தானில் இருந்து தங்களது குழந்தையின் மிக காஸ்ட்லியான ஆபரேஷனுக்காக இந்தியா வந்து, இலவச சிகிச்சை மூலம் தங்களது குழந்தையை காப்பாற்றி அழைத்து சென்ற தம்பதியின் கதை.. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அதன்மூலம் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை உருவாக்கியதாக கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.
மேலும் அந்தப்படத்தின் கதை உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டிருந்த ஆரம்பகட்டத்தில் சல்மான்கானின் தந்தை சலீம்கான் விஜயேந்திர பிரசாத்தை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே ஷோலே, தீவார் உள்ளிட்ட ஹிட் படங்களின் கதை உருவாக்கத்தில் ஒரு கதாசிரியராக பணியாற்றியவர் தான் சலீம்கான். அதனால் விஜயேந்திர பிரசாத்திடம்.. எக்காரணத்தை கொண்டும் நமக்கான மதிப்பையும் உரிமையையும் விட்டுத்தர கூடாது. படத்தின் நாயகனை விட ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகம் கேள்.. ஏனென்றால் கதை தான் படத்தின் ஹீரோ என அறிவுரை கூறினாராம்.
அந்த சமயத்தில் பாகுபலி படம் வெளியாகி விஜயேந்திர பிரசாத்துக்கு இந்திய அளவிலான புகழ் அதிகரித்திருந்தது. அதனால் தான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதைக்காக விஜயேந்திர பிரசாத்துக்காக நாற்பது லட்சம் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் கூறியபோது, அதை ஒரு கோடியாக உயர்த்தினாராம் விஜயேந்திர பிரசாத். இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர்கள் அவரிடம் எண்பது லட்சம் வரை தருவதாக பேரம் பேசியும் அவர் மசியவில்லை. அதன்பிறகு அவர் கேட்டபடியே ஒரு கோடி தரப்பட்டதாம்.