ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அஜித் பற்றிய ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார் வினோத்.
அவர் கூறுகையில், ‛‛அஜித்துக்கு வலியை தாங்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நாமெல்லாம் சுண்டு விரலில் ஒரு சின்ன அடிபட்டால் கூட அதை அனைவரிடத்திலும் சொல்வதோடு காலை தாங்கி தாங்கி நடப்போம். ஆனால் அஜித்தை பொருத்தவரை அவருக்கு வலியைத் தாங்குவது பழகிவிட்டது. முக்கியமாக அவர் நடித்த பைக் சேஸிங் காட்சிகளை படமாக்கும்போது பைக்கில் இருந்து கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு விட்டது. அதனால் அவருக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுத்து விடலாம் என்று தயாரிப்பாளர் கூறினார். ஆனால் அவரோ அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட காயத்துடன் மறுநாள் இரவு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டார்.
பைக் சேஸிங் காட்சி என்பதால் அஜித்துக்கு மூன்று லேயர் உடைகளை அணிய வேண்டும். ஆனால் அடிபட்டு புண்ணாக இருக்கும் காலில் அது போன்ற உடை அணிவது கடினம் என்ற போதும் அந்த உடையை அணிந்து கொண்டு மீண்டும் அவர் நடிக்க தயாரானார். இப்படி தனது உடம்பில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த வலியை தாங்கிக் கொண்டு அஜித் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்கிறார் எச்.வினோத்.
வலிமையும் காவல்துறை சம்பந்தப்பட்ட படம் தான். இந்தப்படத்தில் இன்றைய குடும்பங்களும் இளைய சமுதாயத்தினரும் ஒரு அழுத்தத்திற்கு இருக்கிறார்கள். அது என்ன காரணம் என்பது குறித்து தான் இந்த படம் பேசுகிறது என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வினோத்.