அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் 5 மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வாடா தம்பி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. உள்ளம் உருகுதே என்ற இரண்டாவது பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. யுகபாரதி எழுதி இந்த பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.