‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து பிசியான நடிகையாக மாறினார். அதேநேரம் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே படங்களில் நடித்தார்.
தமிழை விட தெலுங்கு சினிமா பக்கம் சென்ற சாய் பல்லவி, பிசியான நடிகையாக மாறிவிட்டார். அவர் நடிப்பில் ராணாவுடன் 'விராட பருவம்', நாக சைத்தன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சாய் பல்லவி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி தனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் வந்தால் பாலிவுட் படங்களில் கூட நடக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். "பாலிவுட் படங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் திரைக்கதை மிகவும் முக்கியமானது. நான் உடனே சென்று பாலிவுட்டில் அறிமுகம் ஆகிவிட முடியாது. எனக்கு கதையும் கதாபாத்திரமும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.




